’ரஜினி171’ படத்தில் இணைந்த இந்தி நடிகர்
ரஜினி- லோகேஷ் இணைந்துள்ள முதல் படம் 'ரஜினி 171'. இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.
எனவே, இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில், லியோ படத்தில் நெகட்டில் வேடத்தில் நடித்து அசத்திய டான்ஸ் மாஸ்டர் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார்.
இதையடுத்து, ஷாருக்கானை இப்படத்தில் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே, ரன்வீர் சிங் ஓகே சொன்னதால் அவர் நடிக்கவுள்ளதாகவும், ஒப்பந்தம் இனிமேல்தான் நடக்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்த மாதிரி, இப்படத்திலும் பல மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.