செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (16:10 IST)

தனுஷுக்கு ஐஸ் வைத்த சார்பட்டா நடிகை… சீக்கிரம் வாய்ப்பு வந்துடுமோ!

நடிகை துஷாரா தனுஷோடு நடிப்பதுதான் தனது வாழ்நாள் கனவு எனக் கூறியுள்ளார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகின்றன. அதில் ஆர்யாவின் மனைவியான மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள துஷாராவின் கதாபாத்திரம் பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திமுகவினர் துஷாராவை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடாத குறைதான். ஏனென்றால் துஷாரா திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் என்பவரின் மகளாம்.

இந்நிலையில் அடுத்தடுத்து துஷாராவுக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘தனுஷோடு நடிப்பதுதான் என் வாழ்நாள் லட்சியம்’ எனக் கூறியுள்ளார். இதனால் விரைவில் தனுஷ் கண்ணில் அவர் பட்டு விரைவில் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.