ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (17:34 IST)

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன்?

ajith arjun
தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படத்தை அடுத்து அவர் மகிழ்திருமேனி நடிப்பில் உருவாகி படம் விடாமுயற்சி.

அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.  அனிருத் இசையமைக்கிறார்.  இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா  நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட்   கலைஞர்களின் உதவியுடன் அசத்தலான ஸ்டண்ட் காட்சியை படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே அஜித்தின் 50 வது படமாக மங்காத்தாவில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஆனது.

சமீபத்தில் லியோவில் விஜயுடன் அர்ஜூன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, ரஜினியுடன் இணைந்து தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் அர்ஜூன். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.