புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (10:34 IST)

சமூகவலைதளத்துக்கு வருகிறாரா அஜித் ? இணையத்தில் பரவும் கடிதம் உண்மையா ?

நடிகர் அஜித்குமார் சமூகவலைதளங்களில் மீண்டும் இணையப்போவதாக உலாவும் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் எந்த விதமான சமூகவலைதள ஊடகங்களிலும் இல்லை. இந்நிலையில் தனது தரப்பு கருத்துகள் எல்லாவற்றையும் தனது மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா மூலமாகவே வெளியிட்டு வந்தார். டுவிட்டர் நிர்வாகமே அவரை டிவிட்டரில் இணைய அழைப்பு விடுத்தும் அவர் அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் இப்போது ஒரு கடிதம் அதிகமாக பகிரப்பட்டது. அதில் ’நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்’ என அந்த கடிதத்தில் இருக்க, அது உண்மையா என ரசிகர்கள் குழம்பினர். ஆனால் அந்த கடிதம் உண்மையானது இல்லை என அஜித் தரப்பில் தெரிவித்துள்ளனர்.