1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (07:36 IST)

சரக்கடித்தால் கொரோனா வைரஸ் பரவாது ? சமூகவலைதளத்தில் பரவும் செய்தி உண்மையா ?

கொரோனா பியர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மது அருந்தலாம் என்ற செய்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த் டிசம்பர் மாதம் முதன் முதலாக கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3500 க்கும் மேற்பட்டவர்களின் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் வழங்கப்படும் சில தகவல்கள் பொய்யானவையாக உள்ளன. இதை நம்பி மக்கள் அதை பின்பற்றலாமா என யோசித்து வருகின்றனர். வெப்பமான பகுதிகளில் இங்த வைரஸ் பரவாது என்று கூறப்பட்டதை அடுத்து வெயிலில் நடக்க வேண்டும் என்று செய்திகள் வெளியாகியுள்லன. அது போல மது அருந்தினால் இவ்வைரஸ் பரவாது என்றும் சமூகவலைதளங்களில் யாரோ கொளுத்திப் போட அந்த செய்தி வேகமாகப் பரவியது. ஆனால் செய்திக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.