1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (08:54 IST)

அஜித் படத்தின் காப்பியா கோப்ரா? பரபரப்பு தகவல்கள்

அஜித் படத்தின் காப்பியா கோப்ரா?
அஜித் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு வெளியான திரைப்படம் ஒன்றின் அப்பட்டமான காப்பிதான் விக்ரம் தற்போது நடித்து வரும் ’கோப்ரா’ திரைப்படம் என்று வெளியாகியிருக்கும் செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த 2001ஆம் ஆண்டு அஜித் நடித்த சிட்டிசன் என்ற படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்புகளில் வந்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு கொலையை செய்வார். அதேபோல்தான் ’கோப்ரா’ படத்தில் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்து வருவதாகவும் அந்த ஏழு கெட்டப்புகளில் ஒவ்வொரு கெட்டப்பிலும் ஒரு கொலை செய்வது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறுகிறது 
 
இந்த கதை உண்மையாக இருந்தால் அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தின் அப்பட்டமான காப்பியாக தான் ’கோப்ரா’ இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இந்த படம் எந்தப் படத்தின் காப்பியும் கிடையாது என்றும் சொந்தமாக உருவாக்கப்பட்ட கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். படம் வெளிவந்தால் பின்னர், இந்த படம் சிட்டிசன் படத்தின் காப்பியா? அல்லது சொந்தமாக உருவாக்கப்பட்ட கதையா? என்பது தெரியவரும்