புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (14:52 IST)

வலிமை படத்தில் இருந்து யுவன் விலகிய பின்னணி என்ன?

வலிமை படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணிகளில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா விலக அவருக்கு பதிலாக ஜிப்ரான் பணிபுரிந்து வருகிறார்.

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் இசையமைப்பில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன.இந்த நிலையில் திடீரென ’வலிமை’ படத்தின் பின்னணி இசைக்கு யுவனுக்கு பதிலாக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. வலிமை படத்துக்காக யுவன் அமைத்த பின்னணி இசை ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருக்கு பிடிக்காததால் மாற்றித் தரும் படி கேட்டதாகவும், அதனால் யுவன் கடுமையான கோபம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரை நீக்கிவிட்டு ஜிப்ரானை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் இப்போது யுவன் ஷங்கர் ராஜாவிடம் தடையில்லா சான்றிதழ் வாங்க போனி கபூர் முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அஜித்தின் பெரும்பாலான வெற்றிப் படங்களுக்கு யுவன்தான் இசை. அதில் எல்லாவற்றிலும் பின்னணி இசை அதகளமாக இருக்கும். ஆனால் இப்போது வலிமை படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.