1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (19:22 IST)

ரிலீசுக்கு முன்னர் இன்னொரு டிரைலர்: ‘வலிமை’ படக்குழு திட்டம்!

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருந்தது என்பதும் அதன் பின்னர் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் ‘வலிமை’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது என்பது மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலர் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு 10 நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு ‘வலிமை’ ட்ரெய்லரை வெளியிட படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர் இதில் இந்த படத்தின் அஜித்தின் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம்  இடம்பெறும் என்று கூறப்படுகிறது.