“அது உண்மை இல்லை… என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள்… ” அமீர்கான் வேண்டுகோள்
நடிகர் அமீர்கான் ரசிகர்கள் தன்னுடைய படத்தைப் புறக்கணிக்காமல் ரசிகர்கள் அனைவரும் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறியதை அடுத்து அவர் தேசபக்தி அற்றவர் எனக் கூறி “தற்போது லால்சிங் சத்தா படத்தைப் புறக்கணிப்போம்” என சிலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள அமீர்கான் “நான் நமது நாட்டை நேசிக்கவில்லை என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. என் படத்தை புறக்கணிக்காமல் அனைவரும் பாருங்கள்” எனக் கூறியுள்ளார்.