வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:39 IST)

ஏன் பாலிவுட் படங்கள் தோல்வி அடைகின்றன… நடிகர் அமீர்கான் பதில்!

நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் அமீர் கான் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் ‘சமீபகாலமாக ஏன் பாலிவுட் படங்கள் அதிகமாக தோல்வி அடைகின்றன?’ எனக் கேட்ட போது “ரசிகர்களைக் கவராத எந்த படங்களும் வெற்றி பெறாது என்பதை நாம் வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். புஷ்பா, கங்குபாய் கத்தியவாடி உள்ளிட்ட ரசிகர்களைக் கவர்ந்த படங்கள் வசூலிலும் வெற்றி பெற்றன” என்று பதிலளித்துள்ளார்.