இதுதான் நிஜமான உண்மை! வைரமுத்து-சின்மயி சர்ச்சை குறித்து செல்வராகவன்

Last Modified புதன், 29 மே 2019 (23:27 IST)

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தில் முதலில் வைரமுத்துதான் பாடல்கள் எழுதுவதாக இருந்தது. முதல்கட்ட போஸ்டரிலும் அவரது பெயர் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த போஸ்டர்களில் வைரமுத்து பெயர் மிஸ் ஆகியிருந்தது
இதனையடுத்து சின்மயி மீடு சர்ச்சையில் வைரமுத்து சிக்கியதால்தான், தனது படத்தில் இருந்து வைரமுத்துவை செல்வராகவன் தூக்கிவிட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே ஒரு பேட்டியில் இனிமேல் மீடு சர்ச்சையில் சிக்கியவர்களுடன் நான் பணியாற்ற மாட்டேன் என்று செல்வராகவன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து செல்வராகவன் விளக்கமளித்துள்ளார். அதில், வைரமுத்து படத்தில் இருந்து நீக்கப்பட்டது தற்செயலாக நடந்த ஒரு விஷயம், இதற்கும் சின்மயி மீடூ விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் அதே நேரத்தில் 'மீடு' சர்ச்சையில் சிக்கியவர்களை எனது படத்தில் பணிபுரிய நான் அனுமதிப்பதில்லை என்பதும்நிஜமான
உண்மைதான் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :