வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (08:06 IST)

"நல்லவர்கள் வெல்லட்டும்" அறத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குவோம்! - வைரமுத்து!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலின் முடிவுக்காக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறன்றனர். 

இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் அடுத்த பிரதமர் யார் என்றும் அடுத்தது ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்பது குறித்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை  8 மணிக்கு தொடங்கவுள்ளன. அதற்கான பரபரப்புகள் வேகமெடுத்துவிட்டது. 


 
இந்நிலையில் தற்போது  பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் "இந்தியத் திருநாடே! நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது, வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும். அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம்". என்று குறிப்பிட்டுள்ளார்.