வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 22 மே 2019 (13:16 IST)

நிர்வாணமாக புகைப்படத்தை கேட்ட நபர்! சின்மயி அனுப்பிய புகைப்படம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். பிறகு சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து #metoo ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.  
தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  
 
அந்தவகையில் தற்போது  மர்மநபர் ஒருவர் “உங்கள் நிர்வாண போட்டோ அனுப்புங்கள்” என சின்மயிக்கு இன்பாக்ஸ் செய்துள்ளார். அதற்கு சின்மயி nude மேக்கப் கிட் புகைப்படத்தை அனுப்பி அவருக்கு அனுப்பி நோஸ்கட் கொடுத்துள்ளார். இதனால் அந்த நபர் தனது பெயரையே மாற்றியுள்ளார்.