புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (11:37 IST)

போலிஸிடம் நான் அடிவாங்குவதா? மெஹா ஹிட் கதையில் நடிக்க மறுத்த ரஜினி!

திருஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்தது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திருஷ்யம் படம் கிட்டத்தட்ட எல்லா தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் ரீமேக்கில் கமல் நடித்தார். ஆனால் முதலில் இயக்குனர் ஜீத்து ஜோசப் அனுகியது ரஜினியைதான். ஆனால் ரஜினி நடிக்காமல் வெளியேறினார்.

இந்நிலையில் ரஜினி நடிக்க மறுத்த காரணம் இப்போது வெளியாகியுள்ளது. கதைப் பிடித்து போன ரஜினி ‘போலிஸ் ஸ்டேஷனில் அடிவாங்குவது போல இருக்கும் காட்சிகள் வேண்டாம் என்றும் அதில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். பின்னர் கமர்ஷியலாக சீன்களை மாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அப்படி செய்தால் கதை நீர்த்துப் போய்விடும் என்பதால் ஜீத்து ஜோசப் கமலிடம் சென்றுள்ளார்.