தொடர்ந்து நடிக்க ஆசை… கடவுள் மனசு வைக்கனும்- ரஜினியின் எமோஷனல் மொமண்ட்!
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படக்குழுவினரிடம் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசை உள்ளதாகக் கூறியுள்ளாராம்.
நடிகர் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும், சமீப காலமாக இந்திய சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வருகிறார். இப்போது அவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு அவர் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அதன் பின்னரே முடிவெடுக்கப்படுமாம்.
இந்நிலையில் அண்ணாத்த படக்குழுவினரோடு கடைசி கட்ட படப்பிடிப்பில் இருந்த போது நான் தொடர்ந்து நடிக்க ஆசைபடுகிறேன். ஆனால் கடவுள்தான் அதுக்கு மனசு வைக்கனும். உடல் ஆரோக்யம் இருக்கும் வரை நடிப்பேன் எனக் கூறியுள்ளாரம்.