ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (17:26 IST)

‘துக்ளக் தர்பார்’ படத்தில் இருந்து விலகியது ஏன்? அதிதிராவ் ஹைத்ரி விளக்கம்

‘துக்ளக் தர்பார்’ படத்தில் இருந்து விலகியது ஏன்?
விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் துக்ளக் தர்பார் என்ற படத்தில் இருந்து நடிகை அதிதி ராவ் ஹைதாரி விலகி விட்டார் என்றும் அவருக்கு பதிலாக ராஷிகண்ணா இணைந்து உள்ளார் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது துக்ளக் தர்பார் படத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து அதிதி ராவ் ஹைதாரி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். கொரனோ வைரஸ் காரணமாக 6 முதல் 8 மாதங்கள் சினிமா முடங்கியிருந்த நிலையில் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால் புதிய படத்தில் கமிட்டாவதை விட ஏற்கனவே பாதியில் இருக்கும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக துக்ளக் தர்பார் படத்தில் இருந்து விலகினேன் என்று கூறியுள்ளார் 
 
இருப்பினும் இந்த படத்தில் இணைந்து உள்ள ராஷிகண்ணாவுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்றும் விஜய் சேதுபதி உள்பட இந்த படத்தில் அனைவருடனும் பணிபுரியும் வாய்ப்பை இழந்தது எனக்கு வருத்தமான ஒன்று என்றும் இருப்பினும் விரைவில் இதே குழுவுடன் நான் மீண்டும் இணைவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்