செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (08:57 IST)

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நிரந்தரமாக நீக்கப்பட்டாரா பிரியங்கா?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரியங்கா நிரந்தரமாக நீக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா  அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதுவரை தொகுத்து வழங்கிய மைனா நந்தினி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் 
 
ஆனால் ஒரே வாரத்தில் பிரியங்கா பிக்பாஸ் தோழிகளுடன் திடீரென சுற்றுப்பயணத்திற்கு கிளம்பிவிட்டார். இதனால் கடுப்பாகிய விஜய் டிவி தரப்பினரும் பிரியங்காவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது
 
தற்போது மீண்டும் மைனா நந்தினி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் இந்த சீசன் முழுவதுமே அவர்தான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது 
 
மாகாப- பிரியங்கா ஜோடி சூப்பர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய நிலையில் திடீரென பிரியங்கா இந்த நிகழ்ச்சியிலிருந்து பிரியங்கா விலக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது