மோடியின் பஜனை, ராகுல்-பிரியங்கா காந்தியின் அன்னதானம்: புகைப்படங்கள் வைரல்!
மோடியின் பஜனை, ராகுல்-பிரியங்கா காந்தியின் அன்னதானம்: புகைப்படங்கள் வைரல்!
இன்று குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி பஜனை ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது ஏற்கனவே தெரிந்ததே
இந்த நிலையில் அதே குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு வாரணாசியில் நடைபெற்ற அன்னதானத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் குரு ரவிதாஸ் பக்தர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதற்காக ஒரு பக்கம் பஜனை, இன்னொரு பக்கம் அன்னதானம் ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.