வீட்டுக்குள் புகுந்து படமெடுத்த பாம்பு… அலேக்காக பிடித்த தமிழ் நடிகை !
90களின் அனைவருக்கும் அறிந்த நடிகர் அருண்பாண்டியன். இவர் விஜயகாந்தின் கட்சியின் இணைந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது நடிகராகவும் படத் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
தற்போது ஹெலன் என்ற மலையாள பட ரீமேக்கில் நடிக்கிறார். இந்நிலையில், தன் சொந்த ஊரில் வசித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தன் ரசிகர்களுடன் பேசி வந்தார். இந்நிலையில் தஃன் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை தனி ஆளாகப் பிடித்துள்ளார் . அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த மக்கள் கீர்த்தி பாண்டியனையும் அவரது துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.