1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (17:45 IST)

ஜோஷிமத் விவகாரத்தில் முன்கூட்டி நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்வர் கேள்வி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுற்றுலா நகரமான ஜோஷிமத் நிலத்திற்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல் ஆன்மீக தலமாகவும் இருக்கும் ஜொஷிமத் கேதர்நாத் செல்பவர்களுக்கு வழியாகவும் உள்ளது.

கடந்த சில நாட்களாக ஜோஷிமத் நகரம் நிலச்சரிவுகள் மற்றும் பிளவுகளால் மூழ்கி வரும்  நிலையில், 4,500 கட்டிடங்கள் கொண்ட அந்த நகரத்தில் 610 கட்டிடங்கள் விரிசல்கள் ஏற்பட்டு வாழத்தகுதியற்றவையாக மாறியுள்ளன/

இந்த நிலையில்,  இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா விமானத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஜோஷிமத் நகரைப் போன்று மேற்கு வங்கத்தில் உள்ள பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் நிலம் பூமிக்குள் புதையும் அபாயமுள்ளதாகவும்,ஜோஷிமத் நகரில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.இதற்கு அரசு முன் கூட்டியே  நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.