ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , செவ்வாய், 19 மார்ச் 2024 (09:08 IST)

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 'விஜய் பயிலகம்' திறப்பு விழா!.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி தெருவில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்   விஜய் பயிலகம்" திறப்பு விழா  நடைபெற்றது.
 
இந்நிகழ்வில், மாநில துணைச் செயலாளரும் வடக்கு மாவட்டத் தலைவருமான விஜயன்பன் கல்லானை தலைமை தாங்கி, விஜய் பயிலகத்தை" ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
 
மேலும், கழக உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
பயிலகத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆசிரியர் மகளிர் இந்துபிரியாவை முன்னிலைப்படுத்தி தொடங்கப்பட்டுள்ள விஜய் பயிலகத்தில், தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலகத்தில் ஆர்வமுடன் பயில வந்தனர்.
 
அவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா, புத்தகம் மற்றும் பேக் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.