1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (05:41 IST)

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் பிரபலம் ஆனவர் சுசித்ரா. இவர் சினிமா தவிர ரேடியோ ஜாக்கி மற்றும் பத்திரிக்கைகளில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் சுச்சிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கி தற்போது பட வாய்ப்புகளை இழந்துள்ளார்.

அவரின் டிவிட்டர் கணக்கில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்த பதிவுகளை தான் பதிவிடவில்லை என்றும் தன்னுடைய அப்போதைய கணவர் கார்த்திக் குமார்தான் அவற்றை வெளியிட்டார் என்றும், அவருக்கு அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கொடுத்தது தனுஷ்தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் சுசித்ராவுக்கு மனநல பாதிப்பு உள்ளதாக கார்த்திக் குமார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைகளால் தமிழ் சினிமாவில் தனக்கு எந்த வாய்ப்புகளும் கிடைப்பதில்லை என வருத்தப்பட்டுள்ள சுசித்ரா, இந்த பிரச்சனைகளுக்குப் பிறகு நடிகர் அஜித் மட்டுமே தனக்கு போன் செய்து விசாரித்ததாகக் கூறியுள்ளார். அதில் “பிரச்சனைகள் நடந்து ஒரு வருஷம் கழித்து அஜித் எனக்கு போன் செய்து விசாரித்தார். எப்படி இருக்க? என்ன போய்கிட்டு இருக்கு? என்றார். அவரின் நேர்கொண்ட பார்வை படத்தில் அந்த மூன்று பெண்களில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறியா எனக் கேட்டார். அப்புறம் அவரே வேண்டாம்னு சொல்லிட்டார். “நீ இப்பதான் இந்த பிரச்சனைகள்ல இருந்து வெளியே வந்திருக்கேன். அந்த கேரக்டர் வேண்டாம்”னு சொல்லிட்டார். அவர் மட்டுமே போன் செய்து என்னை விசாரித்தார்.” என பேசியுள்ளார்.