செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (20:51 IST)

விருது யாருக்கு? விஜய், விஜய்சேதுபதி, கார்த்தி இடையே கடும் போட்டி

ஒவ்வொரு ஆண்டும் பிலிம்பேர் சவுத் விருது வழங்கும் விழா நடைபெறுவது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா வரும் 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.
 
இந்த விருது வழங்கும் விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்ப்படங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது மெர்சல் படத்திற்காக விஜய், தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக கார்த்தி, விக்ரம் வேதா படத்திற்காக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி, பவர்பாண்டி படத்திற்காக ராஜ்கிரண் ஆகியோர்களிடையே கடுமையான போட்டி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக விஜய், விஜய்சேதுபதி, கார்த்தி இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும், இவர்களில் மூவரில் ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் 'அருவி' படத்தில் நடித்த அதிதிபாலனுக்கும், 'அறம்' படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் சிறந்த நடிகைக்கான விருதை வெல்வதில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.