வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (20:49 IST)

விஜயகாந்திடம் வாழ்த்துபெற்ற நடிகர் செளந்தரராஜா - தமன்னா!

சமீபத்தில் திருமணம் நடைபெற்ற செளந்தரராஜா - தமன்னா தம்பதி, விஜயகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 
‘சுந்தர பாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் செளந்தரராஜா. இவருக்கும் தமன்னாவுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தைச் சந்தித்து இருவரும் ஆசி பெற்றுள்ளனர்.
 
“தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த். சக மனிதரிடமும் சரி, சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் சரி... எந்தப் பாரபட்சமும் இல்லாமல் அன்பு காட்டுவதில் உயர்ந்தவர் அவர். அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும், என் மனைவியும் வாழ்த்து பெற்றதைப் பெருமிதமாக உணர்கிறேன். எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்ந்து, எங்களை வாழ்த்திய புரட்சிக் கலைஞருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் செளந்தரராஜா.