பாண்டிராஜ் & சூர்யா திரைப்படத்தின் கதை – விஜய் தரப்பு அப்செட்!
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் விஜய்க்காக அவர் உருவாக்கிய கதைதான்.
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் பல சர்ச்சைகளுக்குப் பிறகு அடுத்த மாதம் ஓடிடியில் ரிலிஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம்.
இந்த படத்தின் கதையை பாண்டிராஜ் விஜய்க்காக உருவாக்கி அவருக்கு சொல்லி விஜய்யும் ஓகே பண்ணி வைத்திருந்தாராம். ஆனால் இப்போதைக்கு வேலைக்கு ஆகாது என்பதால் சூர்யாவை வைத்து இயக்க முடிவு செய்துள்ளாராம். இதனால் விஜய் தரப்பு பாண்டிராஜ் மேல் அதிருப்தியில் உள்ளதாம்.