செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (06:45 IST)

இந்த எட்டு கெட்டப்பில் ஒன்றுதான் ‘வலிமை’ அஜித்தின் கெட்டப்?

இந்த எட்டு கெட்டப்பில் ஒன்றுதான் ‘வலிமை’ அஜித்தின் கெட்டப்?
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போதிலும் இந்த படத்தின் வில்லன், நாயகி உள்பட எந்த அப்டேட்டும் வெளிவராததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதல் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் படத்தின் அப்டேட் வேண்டும் என கோரிக்கை விடுத்து ஒரு புதிய ஹேஷ்டேக் உருவாக்கி அதனை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர் என்பதும், குறிப்பாக அஜித்தின் கெட்டப் வெளிவந்தால்தான் அவர்கள் திருப்தி அடைவார்கள் என்பதும் குறிப்பிடதக்கது 
 
சமீபத்தில் அஜித் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட போது இருந்த கெட்டப்பை பார்த்து அதுதான் வலிமை கெட்டப் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது ஆனால் இதற்கு முன்னர் இதே போல் எட்டு விதமான கெட்டப்புகளில் சமீபத்தில் அவர் வெளியே வந்தார். அந்த கெட்டப்புகளில் எந்த கெட்டப் அஜித் கெட்டப் என்று புரியாமல் அஜித் ரசிகர்கள் திணறி வருகின்றனர்
 
இந்த நிலையில் சுமார் 30% படப்பிடிப்பை முடித்துவிட்ட அதிருப்தியில் படக்குழுவினர் அஜீத்தின் கெட்டப்பை எந்த காரணத்தை முன்னிட்டும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும்வரை கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது