திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (13:19 IST)

'எப்ப அந்த ஆசை வருகிறதோ', அப்போது திருமணம் - டாப்ஸி

தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அதன் பின்னர் இந்தி, தெலுங்கு, உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ என்பவரை காதலித்துவருகிறார். அவருடன் நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டதாக தகவல் பரவியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டாப்ஸி "இப்போதைக்கு திருமணம் இல்லை. எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வருகிறதோ அப்போது தான் திருமணம் செய்துகொள்வேன்." என்றார்.
 
"பிடித்த ஒருவருடன் இருப்பதற்கு திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள  மாட்டேன்" என்றும் டாப்ஸி கூறினார்.