1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:50 IST)

தனுஷின் ''வாத்தி'' பட 2 வது சிங்கில் எப்போது ரிலீஸ்?

vaathi
நடிகர் தனுஷின் வாத்தி பட 2 வது சிங்கில் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  தனுஷ். கர்ணன்,  நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பின், தனுஷ் தற்போது நடித்துள்ள படம் வாத்தி.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

இந்த படம் பிப்ரவரி  மாதம்தான் ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள   நாடோடி மன்னன் என்ற பாடல் வரும் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றூ வெளியிட்டுள்ளது படக்குழு.