திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2022 (22:55 IST)

வாத்தி படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜிவி.பிரகாஷ்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும்  வரும் படம் ‘வாத்தி.

இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார், வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜிவி, பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.  முதல் சிங்கில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

எனவே, புதிய அப்டேட் ஒன்றை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘’நாடோடி மன்னன்’’ என்ற இரண்டாவது சிங்கில் பாடல் பதிவு நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.