1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:00 IST)

லியோ படத்தில் இணைந்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள நிலையில், இப்போது மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் இணைந்துள்ளார்.