வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:18 IST)

‘சாமி ஸ்கொயர்’ ஷூட்டிங் பிரேக்கில் விக்ரம் என்ன செய்தார் தெரியுமா?

சாமி ஸ்கொயர்’ ஷூட்டிங் பிரேக்கில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சில நாட்கள் நடித்துள்ளார் விக்ரம். 
 
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடித்து வருகிறார். காரைக்குடி மற்றும் திருநெல்வேலியில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
 
‘சாமி ஸ்கொயர்’ ஷூட்டிங்கிற்கு சில நாட்கள் பிரேக் விடப்பட்டதால், கெளதம் மேனன் இயக்கத்தில் தான் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் விக்ரம். அவரும், ராதிகா சரத்குமாரும் சம்பந்தப்பட்ட காட்சிகள், சென்னையில் உள்ள ரமதா பிளாஸாவில் படமாக்கப்பட்டுள்ளன.
 
‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியில் நேற்று தொடங்கியுள்ள நிலையில், அங்கு சென்றுவிட்டார் விக்ரம்.