திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (15:17 IST)

“நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்” - விக்ரம்

‘நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்’ என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’, ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். அதன்பிறகு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.
 
விக்ரம் மகன் துருவ் விக்ரமும் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘வர்மா’ என தலைப்பு வைத்துள்ளனர். பாலா  இயக்குகிறார்.
 
“என் மகன் நடிக்கும் படத்தை, ஒரு தந்தையாகப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ‘அர்ஜுன் ரெட்டி’ என் மகனுக்குப் பொருத்தமான கதை. இந்தப் படத்தில் அவன் நடிக்காவிட்டால் நானே நடித்திருப்பேன். நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் விக்ரம்.