அதற்கு அடிமையான நடிகை ஆண்டிரியா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

Last Updated: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (18:23 IST)
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வந்ததால்  திறமையான நடிகை என பலரால் பாராட்டப்பட்டவர்.


 
ஆனால், இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த வடசென்னை படத்திற்கு பிறகு அடுத்த அறிவிப்பு எதுவும் வராததால் அவரது ரசிகர்கள் ஆண்டிரியாவுக்கு என்ன ஆனது என ஆளாளுக்கு கேள்வி எழுப்பி வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது அதற்கெல்லாம் ஒரு அழகிய புகைப்படத்துடன் விடை சொல்லியிருக்கிறார் ஆண்ட்ரியா. அதாவது,  நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும் வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த எனது வாழ்க்கை என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதித்திருந்த காரணத்தால் இதிலிருந்து விடுபட்ட என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறையை முயற்சித்தேன் அதுதான் காரே (KARE).


 
இது என்னை போல காஃபி போதைக்கு அடிமையானவர்களுக்கு எளிதல்ல. எனவே ஒரு கப் மூலிகை தேநீர் மற்றும் யோகா... நாளின் நல்ல தொடக்கமாகும்.  தற்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்ற பிறகு நான் புதியவளாக என்னை உணர்கிறேன். டாக்டர் பிரகாஷ் கல்மேட் தலைமையிலான KARE-வில் உள்ள குழுவினருக்கு மிகப் பெரிய நன்றி. என்று கூறி அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :