திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (20:29 IST)

அவெஞ்சர்ஸ் படத்தில் இணைந்த விஜய்சேதுபதி!

ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம் இந்தியாவில் ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று மொழிகளிலும் ஒரு புரமோஷன் பாடலை கம்போஸ் செய்துள்ளார். 
 
கடந்த 1ஆம் தேதி இந்தி புரமோஷன் பாடல் வெளியான நிலையில் சற்றுமுன் தமிழ்ப்பாடல் வெளியானது. அவெஞ்சர்ஸ் ஆன்ந்தம் என்று கூறப்படும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தமிழ் டிரைலருக்கு விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும் இந்த படத்தின் தமிழ் வசனத்தை எழுதியவர் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று சென்னையில் நடைபெற்ற அவெஞ்சர்ஸ் தமிழ் டிரைலர் மற்றும் ஆன்ந்தம் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.