செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (12:00 IST)

ரஜினி உடம்பிற்கு என்னதான் ஆச்சு? வெளிவந்தது உண்மை!

ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி பரவி வரும் வதந்திக்கு, அவரது தரப்பிலிருந்து உண்மையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் ரூ. 600 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் சமீப நாட்களாக நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அவருக்கு வீட்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின. 
 
தற்போது இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் தரப்பிலிருந்து பேசிய அவரது செய்தி தொடர்பாளர், ரஜினிகாந்திற்கு வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. மேலும்,  அவரின் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.