கொரோனா வைரஸ் கற்றுத்தந்த பாடங்கள் இதுதான்: பிரபல இயக்குனர்
கொரோனா வைரஸால் பல தீங்குகள் மனித இனத்துக்கே இருந்தாலும் ஒரு சில நன்மைகளும் உள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
கங்கை நதி தூய்மை, சுற்றுச்சூழல் தூய்மை, காற்றின் மாசில் தூய்மை உள்பட பல நல்ல விஷயங்கள் கொரோனாவால் நடந்து உள்ளது. மேலும் மனித நேயம் பலரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது என்பதும் ஓடி ஓடி 24 மணி நேரமும் உழைத்தவர்கள் தற்போது வீட்டில் குடும்பத்தினருடன் செலவு செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ் கற்றுத்தந்த பாடங்கள் இதுதான்
இந்த நிலையில் கொரோனா மனித இனத்திற்கு என்னென்ன கற்றுத் தந்தது என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த டுவிட் இதுதான்:
கொரோனா கற்றுத்தந்தது
தேவைக்கான செலவு
ஓடிய வாழ்வை நிறுத்தி
ஓட்டத்தின் நோக்கம் பற்றி
கேள்வி கேட்டது.
இயற்கையின் அருமை தெளிவித்தது
மரண பயம் தந்தது
ஆணவம் தணித்தது
அதிகபட்சம் அடுத்த அறைக்கு நடக்க வைத்தது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சமாளிக்கும் ஆசிரியர்களை தெய்வமாகக் கருத வைத்தது