அதிமுக கொடியை எரிக்கும் விஜய் ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ

Last Modified சனி, 10 நவம்பர் 2018 (09:26 IST)
'சர்கார்' படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்ததை அடுத்து தயாரிப்பு நிறுவனம் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு நேற்று முதல் மீண்டும் திரையிட்டது. ஆனால் காட்சிகளை நீக்கிய பின்னரும் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை

விஜய் பேனர்கள், கட் அவுட்டுக்களை கிழித்த அதிமுகவினர், விஜய் கொடும்பாவியையும் எரித்தனர். இதற்கு பதிலடியாக அதிமுக கொடியை விஜய் ரசிகர் ஒருவர் எரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த வீடியோவின் பின்னணியில் 'எங்க தளபதியை பகைத்து கொண்டவர்களுக்கு இந்த நிலை தான் ஏற்படும். நாங்கதான் இனி சர்கார். இனிமேல் எங்க சர்கார் தான்' என்ற குரல் கேட்கின்றது. இருப்பினும் இந்த வீடியோவில் யாருடைய முகமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :