கடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் சர்கார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படித்திருந்தாலும் இரண்டு இடங்களில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது
சர்கார் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது என்றாலும், கேரளா மற்றும் அமெரிக்காவில் கடும் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாம். கேரளாவில் இப்போது வரை வெறும் ரூ. 9 கோடி தான் வசூலித்துள்ளதாம்.
இருந்தாலும் அங்கு ரூ. 25 கோடி வரை வசூல் செய்தாலே நல்ல லாபத்தை பெரும் என்கிறது சினிமா வட்டாரம். அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் வசூல் வர இன்னும் 7 லட்சம் டாலர் வசூல் வந்தாலே லாபம் என கூறுகின்றனர்.
இந்த நிலையில் சர்கார் மற்ற இடங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் குவித்தாலும் கேரளா மற்றும் அமெரிக்காவை பொறுத்தவரை அது கம்மி தான் என்கிறது அங்குள்ள சினிமா வட்டராம்.