செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (17:17 IST)

வீட்டில் இருந்தபடி இனிமேல் ஆன்லைனில் புதுப்படம் பார்க்கலாம் !

உலகம் எங்கிலும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1. 30 கோடிக்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சில தளர்வுகளுடன் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சினிமாத் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் எப்போது இயல்புநிலை திரும்பும் என்பதைக் கணிக்க முடியாத   நிலையில் உள்ளது. சினிமாப் படங்கள் சில  ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

ஆனாலும் அவை சினிமா தியேட்டரில் அமர்ந்து பார்ப்பதை போன்ற அனுபவத்தை தருவதில்லை என்பது அனைவரின் வாதம்.

இந்நிலையில் ஓடிடி தளத்தில் ஆன்லைனில் படம் பார்க்க குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மாதம் தோறும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் சினிமா தயாரிப்பாள்ர் சி.வி.குமார் என்பவரின் முயற்சியால் வீட்டில் இருந்தபடி ’ரீகல் டாக்கீஸ்’ என்ற ஆப் மூலம் ஆன்லைன் தியேட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒன்பது குழி சம்பத் என்ற படம் வரும்  24 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.