செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (10:46 IST)

லாக்டவுனில் வியப்பூட்டும் விஜே ரம்யாவின் ட்ரான்ஸ்பர்மேஷன்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா கொரோனா ஊரடங்கில்  ஒர்க் அவுட் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வரும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். மேலும், அவர் முன்பை விட இப்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் அண்ட் பிட்டான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.  இந்நிலையில் தற்ப்போது இந்த லாக்டவுனில்  5 கிலோ எடையை குறைத்துள்ளதாக கூறி லாக்டவுனிற்கு முன்பு - லாக்டவுனிற்கு பின்பு என  இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ரம்யாவின் இந்த ட்ரான்ஸ்பர்மேஷன் சமூகவலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Swipe