காதலில் மீண்டும் நெருக்கமாகும் உயரமான ஜோடி!

VM| Last Updated: புதன், 27 பிப்ரவரி 2019 (16:46 IST)
வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபல நடிகர் அவர்.  சமீபத்தில் எடையை குறைத்து அழகாக மாறிய நான்கெழுத்து நடிகையை தீவிரமாக காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வந்தார்கள்.ஆனால் இருவரும் சத்தியம் செய்தார்கள். நாங்கள் எப்போதுமே காதலிக்கவில்லை. இருவரும் நண்பர்கள் தான்.  திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.  எங்களைப் பற்றி தவறான வதந்தி பரப்பாதீர்கள் என மீடியாக்கள் மீது கடுமையாக பாயந்தனர்.
 
இந்நிலையில் சமீபத்தில்  பிரபல இயக்குநரின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு நடனமாடியதை பார்த்து அவர்கள் இருவரும்  காதலிப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுத்தனர். 
 
இந்நிலையில் இருவரும் ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இருவரும் சேர்ந்து நடித்துள்ள படங்களை விளம்பரப்படுத்த செல்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் மீண்டும் காதலில் நெருக்கமாகிவிட்டதாக  தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :