1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 22 பிப்ரவரி 2021 (19:54 IST)

மறைத்த நடிகை சித்ராவின் "கால்ஸ்" ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. வெளிவந்த இரண்டே நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
தற்போது அப்படத்தின் "காலங்கள் கரைகிறதே" எனும் பாடல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதுவும் வெளிவந்த இரண்டே தினங்களில் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் #4 ல் உள்ளது. மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று திரைக்கு வர தயாராகவுள்ளது. இப்படக்குழு மக்களிடம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் மறைந்த நடிகை சித்ராவிற்காகவும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ள படக்குழு படத்தின் மீதான மக்களின் கவனத்தை அதிகரித்துள்ளனர். அம்மா மகளுக்கு இடையே மறைந்து கிடக்கும் அளவற்ற பாசத்தின் ஆழத்தை ஸ்னீக் பீக் காட்சி காட்டுகிறது. இதோ அந்த வீடியோ....