ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (20:12 IST)

சீரியல் நடிகை சித்ராவுக்கு விஜய் டிவி நடத்திய பிரம்மாண்ட நலங்கு ஃபங்க்ஷன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

சித்ரா ஹேமந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடித்து முடிந்துவிட்டது. இந்த இந்த வருட இறுதிக்குள் கல்யாணம் முடிந்து விடும் என்றும் அவர் தெரிவித்திருந்துள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் சித்ரா - ஹேமந்த் ஜோடிக்கு நலங்கு ஃபங்க்ஷன் நடத்தி அழகு பார்த்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் சூப்பர் வைரலாகி வருகிறது.