செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (09:30 IST)

கொஞ்சும் மைனாக்களே... விஜே சித்துவின் கியூட் டான்ஸ் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருக்கிறது.

இடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டதால் சித்ரா வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வந்தார். இதையடுத்து சித்ராவுக்கு ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றது.

இந்த வருட இறுதிக்குள் கல்யாணம் முடிந்து விடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சித்ரா தனது வருங்கால துணையோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் இறக்கி வருகிறார். அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சும் மைனாக்களே பாடலுக்கு கியூட்டான டான்ஸ் போட்ட வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.