வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (18:20 IST)

ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா பெயர் வைத்த அமைச்சர்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல்வாதிகள் செய்யும் கூத்துகளுக்கு பஞ்சமே இல்லை. வேட்பாளர் பெயரை மாற்றி சொல்வது, சின்னத்தை மாற்றி சொல்வது, மாற்றுக்கட்சி வேட்பாளருக்கு வாக்கு கேட்பது, இறந்தவர் பிரதமர் ஆவார் என்று சொல்வது என கணக்கில்லாமல் காமெடிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆண்குழந்தை ஒன்றுக்கு ஜெயலலிதா பெயர் வைத்த அமைச்சர் ஒருவரது செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, செல்வராஜ் - பிரியா என்ற தம்பதியர் தங்களுடைய 10 மாத குழந்தைக்கு பெயர் வைக்குமாறு அமைச்சரிடம் கேட்டு கொண்டனர். உடனே அவர் குழந்தைக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் செங்கோட்டையன் பெயர் வைத்தார்.
 
உடனே அருகிலிருந்தவர்கள் அந்த குழந்தை ஆண் குழந்தை என்று கூறினர். அதன் பின்னர்தான் ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயரிட்டது தெரிய வந்தது. உடனே பெயரை மாற்றி ராமச்சந்திரன் என்று பெயரிட்டார். பத்து மாத குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கூறிய பெற்றோர்களை குறை சொல்வதா? ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயரிட்ட அமைச்சரை குறை சொல்வதா? என்று தெரியாமல் பொதுமக்கள்தான் குழப்பத்தில் இருந்தனர்.