செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜனவரி 2019 (15:42 IST)

'விஸ்வாசம்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

'விஸ்வாசம் திரைப்படம் நேற்றைய முதல் நாளில் தமிழகத்தில் ரூ.17 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாட்டு வசூல் குறித்த தகவல்கள் இன்னும் வரவில்லை. அஜித் நடித்த முந்தைய படமான 'விவேகம்' படத்தின் முதல் நாள் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களின் வசூல் ரூ.26 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று விஸ்வாசம்' படத்துடன் ரஜினியின் 'பேட்ட' படமும் ரிலீஸ் ஆனதால் திரையரங்குகள் சரிபாதியாக பிரிக்கப்பட்டது. விவேகம் படம் சோலோ ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் 'விஸ்வாசம்' , 'பேட்ட' ஆகிய இரண்டு படங்களின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருக்கும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.