1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2023 (14:58 IST)

''விடுதலை'' பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

viduthalai
'விடுதலை' படத்தின் இசை  மற்றும் டிரைலர் மார்ச்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர்  இயக்கத்தில் சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.

இந்த படத்தின் படப்பிடிப்பு   கடந்தாண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, விடுதலை படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளை இளையராஜா தொடங்கினார்.

இந்த நிலையில், சமீபத்தில், இளையராஜா இசையமைப்பில், தனுஷ் பாடிய பாடல் வெளியாகி வைரலானது.

இப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி விடுதலை பட முதல் பாகமும், அடுத்து  மூன்று  மாதம் கழித்து ஜூலையில் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  மார்ச் 8 ஆம் தேதி இப்படதின் இசை மற்றும் டிரெயிலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.