கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்!
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து நலன், கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தை பிப்ரவரி இறுதியில் பூஜையோடு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை காயத்ரி பரத்வாஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.