செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:39 IST)

"விஸ்வாசம் டீஸர் பிரம்மிப்பு " -வெளிவரும் முன்னே பார்த்து பாராட்டிய பிரபலம்!

சிவா- அஜித் கூட்டணியில் 4வது முறையாக தயாராகியுள்ள விஸ்வாசம் படம்  கிராமத்து பின்னணியில் திருவிழா போல் உருவாக்கப்பட்டுள்ளது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் பொங்கலன்று வெளிவர உள்ளது. டி இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள்.
 
இப்படத்தின் மோஷன் போஸ்டரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் வெளியிட்டது படக்குழு. அடுத்து டீஸர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆவலாக இருக்கின்றனர் தல ரசிகர்கள்.
 
இந்நிலையில் சென்சார் குழுவின் ஒருவரான உமைர் சாந்து டுவிட்டரில், விஸ்வாசம் டீஸர் பார்த்துவிட்டேன் "பிரமிப்பு" என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அஜித் மிக அழகாக உள்ளார் என்பதையும் உமர்  தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.