செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (08:18 IST)

விவேகம் சாதனையை எந்த படத்தாலும் முறியடிக்கவில்லை: பிரபல திரையரங்கு நிர்வாகி

திரையங்கு டிக்கெட் முன்பதிவில் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படைத்த சாதனையை, சர்கார், 2.o உள்பட எந்த படமும் முறியடிக்கவில்லை என ரோகிணி திரையரங்கு நிர்வாகி டுவிட்டரில் கூறியுள்ளார்.

 
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடித்துள்ள 2.0 படம் கடந்த 29-ம் தேதி  வெளியானது. முதல் நாளில் விஜயின் சர்கார் வசூலித்த தொகையை விட அதிக வசூலை 2.0 குவித்திருப்பதாக கூறப்படுகிறது.
 
திரையரங்க டிக்கெட் முன் பதிவில் விவேகம் படைத்த சாதனையை சர்கார், 2.o ஆகிய படங்கள் முறியடிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கின் நிர்வாக அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட  அந்த பதிவில் டிக்கெட் முன்பதிவில், விவேகம் முதலிடத்தில் இருப்பதாகவும், இரண்டாவது இடத்தில் மெர்சல் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் 3வது இடத்தில் பாகுபலி 2 உள்ளதாகவும், 4வது இடத்தில் 2.o  மற்றும் 5வது இடத்தில் சர்காரும் உள்ளதாக கூறியுள்ளார்.